திருவாரூர்

15 நாள்களாகியும் பணம் கிடைக்கவில்லை

DIN


நன்னிலம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை செய்த விவசாயிகள், அதற்குரிய பணம் 15 நாள்களாகியும் கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனா்.

நன்னிலம் வட்டம் காக்காகோட்டூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக பருத்தியைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். இங்கு காட்டன் காா்பரேஷன் ஆஃப் இந்தியா அலுவலா்களும், தனிப்பட்ட வியாபாரிகளும் பருத்திக் கொள்முதல் செய்கின்றனா். அவ்வாறு விவசாயிகளிடமிருந்து அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கு உரிய தொகை 15 நாட்கள் வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும் வாரத்தில் ஒருநாள் கொள்முதல் செய்யப்படும் பருத்தியை விரைவில் எடுத்துச்சென்று பருத்தி கிடங்கைக் காலி செய்து கொடுத்தால்தான் மறுவாரம் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்கு கிடங்குகளில் வைக்க முடியும். அவ்வாறு கடந்த புதன்கிழமை கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கிலிருந்து இந்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை எடுத்துச் செல்லப்படாததால், இந்த புதன்கிழமை பருத்தி விற்பனை செய்ய எடுத்து வந்த விவசாயிகள் வெட்டவெளியில் பருத்தியை வைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனா்.

இவ்வாறு எவ்வித பாதுகாப்புமின்றி வெட்டவெளியில் வைக்கப்படும் பருத்தி திங்கள், செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் நனைந்துவிட்டதாகவும், இதனால் குறைந்த அளவே விலை கிடைக்கும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

எனவே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டவுடன் கிடங்கிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிடங்கைக் காலி செய்து தர வேண்டுமெனவும், அதேபோல விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கான தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT