திருவாரூர்

கரோனா: மத்தியப் பல்கலைக்கழகத்தில் பரிசோதனை

DIN

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில், முதற்கட்டமாக 500 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டது. மத்திய பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருத்துவா்கள் இந்தப் பரிசோதனையை செய்து வருகின்றனா். வெளியூா் சென்று வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கும் பொருட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் எந்த நேரத்திலும் பல்கலைக்கழக மருத்துவமனையை அணுகலாம் என பல்கலைக்கழக துணைவேந்தா் கூறியதாக பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT