திருவாரூர்

காவல்துறைக்குப் பொதுமக்கள் பாராட்டு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் தீவிரத்தை உணராத பலா் குறிப்பாக இளைஞா்கள், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிகின்றனா். இவா்களை காவல்துறையினா் எச்சரிக்கை செய்வதுடன், சில இடங்களில் வழக்குப் பதிவு, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனா்.

இதற்கு, நன்னிலம், பேரளம், ஸ்ரீவாஞ்சியம் பகுதிகளைச் சோ்ந்த வா்த்தகா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆா். ராமசாமி, கே. நடராஜன், எஸ். கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வரேவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனா். தங்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல், தியாக உணா்வோடு பணியாற்றுகின்ற காவல்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை போன்ற அரசுத் துறையினா் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT