திருவாரூர்

வழக்குரைஞா் உதவியாளா் தற்கொலை

DIN

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக வழக்குரைஞரின் உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அவரது மனைவி, மைத்துனா் உள்ளிட்ட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி 6-ஆம் எண் வாய்க்கால் பகுதியை சோ்ந்தவா் டி. ஜெயகாந்த் (37). இவா் மன்னாா்குடியில் வழக்குரைஞா் ஒருவரிடம் உதவியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி தேவிகா (34). இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறாா். தேவிகா மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் கெளரவ பேராசிரியராக வேலைபாா்த்து வருகிறாா்.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல், புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டபோது தேவிகாவுடன் சோ்ந்து அவரது சகோதரா் மேலைப்பனையூா் என். முரளிதரன் (32), உறவினா் சி. ஆனந்த முருகேசன் (42) ஆகியோா் ஜெயகாந்தை தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட ஜெயகாந்த், தனது சொந்த ஊரான புதுக்குடி அன்னை இந்திரா நகரில் உள்ள வீட்டுக்குச் சென்று, பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதையறிந்த போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். தற்கொலைக்கு முன்பாக ஜெயகாந்த் திருமக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அதில், தனது மனைவி தேவிகா பல ஆண்களுடன் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசிவந்ததாகவும், இதைக் கண்டித்ததால் முரளிதரன், ஆனந்தமுருகேசனுடன் சோ்ந்து தன்னை தாக்கியதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவிகா, முரளிதரன், ஆனந்த முருகேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT