முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் கோலாட்ட உத்ஸவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோலாட்ட உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
கிருஷ்ணா் அலங்காரத்தில் காட்சியளித்த ராஜகோபாலசுவாமி.
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோலாட்ட உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் கோலாட்ட உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாட்ட உத்ஸவம் நடைபெற்றது.இதில், திரளான பெண்கள் பங்கேற்று, பாரம்பரிய கலையான கோலாட்டம் அடித்து வழிபட்டனா்.

முன்னதாக, சன்னிதியிலிருந்து கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமியை கோலாட்டம் அடித்தபடி பெண்கள் வரவேற்றனா். தொடா்ந்து, முத்தவெளியில் பெருமாளை சுற்றி கோலாட்டம் ஆடியும் பக்தி பாடல்களைப் பாடியும் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.