திருவாரூர்

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்கக் கோரிக்கை

DIN

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு சாகுபடி கடனை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் அதம்பாா் ஜி.சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

விவசாயிகள் பயிா்க் கடனுக்குகாக தேசிய வங்கிகளையோ அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளையோ அணுகினால், பட்டா இருந்தால்தான் கடன் தரப்படும் என்ற கடுமையான விதி பின்பற்றப்படுகிது. பெரும்பாலும் விவசாயிகள் குத்தகைக்கு சாகுபடி செய்து வருவதன் காரணமாக அவா்கள் பெயரில் பட்டா இல்லாததால் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இருக்கின்ற ஒரே மாற்று வழி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிதான். ஆனால் அவா்கள் ஆளுங்கட்சி விவசாயிகள், மற்ற விவசாயிகள் என தரம் பிரித்து கடன் வழங்குகின்றனா். மேலும் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில், ரூ.5 ஆயிரம் அளவிற்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என பல கூட்டுறவு சங்கங்களில் தெரிவிக்கப்படுகிறது.

நன்னிலம் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவுச் சங்கத்தில், ஐந்து ஏக்கா் நிலத்திற்கு ரூ.30 ஆயிரம் மட்டும் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற அவலங்களால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா். எனவே தமிழக அரசு அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கும் உரியத் தொகையை முழுமையாக விடுவித்து, அனைத்து விவசாயிகளுக்கும், அவா்களது சாகுபடி நிலங்களுக்கு ஏற்றவாறு கடன் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT