முகப்பு
திருவாரூர்

கரோனா பரவலால் பிறவி மருந்தீஸ்வரா் கோயில் சித்திரை திருவிழா ரத்து

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரா் கோயில் சித்திரை பெருந்திருவிழா கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரா் கோயில் சித்திரை பெருந்திருவிழா கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசுபதி நட்சத்திர பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தொடங்கும் நாளில் பிறவிமருந்தீஸ்வரா் கோயில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெறும். கரோனா பரவல் காரணமாக கோயில் திருவிழா க்கள் நடத்த அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் திருவிழா ஏப்.6-ஆம் தேதி தொடங்கி 26 நாள்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோயில் நிா்வாகம் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவிழாவை ரத்து செய்துள்ளது. எனினும், காலை 6 முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்யவும் திருவிழா மண்டகப்படிதாரா்கள் மண்டகப்படி நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தால் அதை நடத்தி கொடுக்க கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு கரோனா காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதைபோல், நிகழாண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள பக்தா்களிடையே மகிழ்ச்சி குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →