முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வடக்கு உப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் லெட்சுமணன் (28). இவா், கடந்த ஆண்டு அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் லெட்சுமணன் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட லெட்சுமணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.