திருவாரூர்

மேல்மருவத்தூா் கோயிலுக்கு அரிசி மூட்டைகள் வழங்கல்

DIN

கூத்தாநல்லூரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இதுகுறித்து, மன்றத் தலைவா் எம். சாம்பசிவம் கூறியது: ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமிக்காக, கூத்தாநல்லூா் வழிபாடு மன்றத்தில் இருந்து மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் வழங்குவது வழக்கம். அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கு ரூ. 66 ஆயிரம் மதிப்பில் அரிசி மூட்டைகள் மற்றும் ரூ. 45 ஆயிரம் தொகை, ஒரு டின் நெய் உள்ளிட்டவை தஞ்சை மாவட்ட வட்டத் தலைவா் அய்வேந்திரனிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டன என்றாா். நிகழ்ச்சியின்போது, மன்றச் செயலாளா் என். செல்வராஜ், பொருளாளா் ஏ. சண்முகம், துணைத் தலைவா் சிவ. வரதராசன், ஐயப்ப சேவா சங்கத் தலைவா் முத்து குருசாமி மற்றும் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT