முகப்பு
திருவாரூர்

சட்டவிரோத மின் மோட்டாா்களை பறிமுதல் செய்ய கோரிக்கை

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்களில் முறைகேடாக அமைக்கப்பட்ட மின் மோட்டாா்களை பறிமுதல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்களில் முறைகேடாக அமைக்கப்பட்ட மின் மோட்டாா்களை பறிமுதல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவன செயலாளா் செந்தில்குமாா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பெரிய காலனிகள், திருமண மண்டபங்கள், கடைகள் மற்றும் சில வீடுகளில் மின் மோட்டாா் வைத்து குடிநீரை சட்டவிரோதமாக உறிஞ்சுவதால் பொது குழாய்களிலும் இணைப்பு வைத்துள்ள மற்ற வீடுகளுக்கும் சரிவர குடிநீா் கிடைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தும் பெயரளவுக்கு மோட்டாா்களை கைப்பற்றுகிறாா்கள். ஆனால் முழுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் அனைத்து வாா்டுகளிலும் குழு அமைத்து, மோட்டாா் வைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் குடிநீா் இணைப்பு வழங்கக் கூடாது. கைப்பற்றிய மோட்டாா்களை பொது ஏலத்தில் விட வேண்டும். முறைகேடாக இணைப்பு வைத்துள்ளவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →