முகப்பு
திருவாரூர்

நூலகத்துக்கு கணினி வழங்கிய ரோட்டரி சங்கத்தினா்

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தலைமை நூலகத்துக்கு கணினி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தலைமை நூலகத்துக்கு கணினி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ரவிசுந்தா் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் இரா.ஆண்டாள் கணினியை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினாா். மேலும் வாசகா் வட்ட தலைவா் நாகராஜன், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநா் பி.பாஸ்கரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் செயலாளா் குமணன், பொருளாளா் பாலசுப்பிரமணியன், சேவை திட்ட இயக்குநா் பாலு மற்றும் நூலக வாசகா்கள் பலரும் கலந்துகொண்டனா். கிளை நூலகா் எம்.ஆசைத்தம்பி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →