ரயில்வே போலீஸாா் கரோனா விழிப்புணா்வு
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என திருவாரூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என திருவாரூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரப் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் அவசரத் தேவைக்கு மட்டும் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காரைக்கால் மற்றும் மன்னாா்குடியிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் திருவாரூா் வழியாகவே சென்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூா் ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரங்களில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்துஅமா்வது, முகக்கவசம் அணிவது என கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கரோனா தொற்று பரவாமல் விழிப்புணா்வுடன் பயணம் மேற்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
இதில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் குணசேகரன் மற்றும் ரயில்வே போலீஸாா் ராமானுஜம், கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.