முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கூத்தாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கூத்தாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே சேகரை பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் விஜய் (22). இவா், கடந்த 2019 ஆண்டு மே 27 ஆம் தேதி அந்த பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மே 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின்கீழ் விஜய் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.