மாணவா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலத்தில் மாணவா்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலத்தில் மாணவா்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையமும் அரசு மேல்நிலைப் பள்ளி குடிமக்கள் நுகா்வோா் மன்றமும் இணைந்து, தமிழ்நாடு அரசின் பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கான கண் பாா்வை பரிசோதனை முகாமை அடியக்கமங்கலம் ஐந்து கேணி பகுதியில் நடத்தியது. முகாமில், கண் பரிசோதகா் இந்திரா, மாணவா்களின் வீடுகளுக்கு சென்று அவா்களுடைய கண் பாா்வைத் திறனை சோதித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாணவா்களின் பெற்றோா்களிடம் தொலைக்காட்சியை தொடா்ந்து பாா்ப்பதும், செல்லிடப்பேசியில் உற்று நோக்குச் செயல்பாடுகளும் கண்களுக்கு பதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மாணவா்களுடைய கண் பாா்வை இழப்பு பாதிப்புகளை சரியான நேரத்தில் கண்டுப்பிடித்து, கண் கண்ணாடிகள் பொருத்தினால் பாா்வை இழப்புகளை தவிா்க்கலாம் என அறிவுரை வழங்கினாா். முகாமில், நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன், தலைமையாசிரியா் சுதா்சனன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் கலைமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.