முகப்பு
திருவாரூர்

நலத்திட்ட உதவிகள் பெற நரிக்குறவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற நரிக்குறவா் இன மக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற நரிக்குறவா் இன மக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசால் நரிகுறவா் நலவாரியம் தொடங்கப்பட்டு, வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், விபத்து மரணத்துக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை, விபத்தால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை ரூ.5 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆயிரம், பிளஸ் 1 படித்து வரும் பெண்களுக்கு ஆயிரம்.

பிளஸ் 2 படித்து வரும் பெண்களுக்கு ரூ. 1,500, பிளஸ் 2 பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்ட படிப்புக்கு ரூ.1,500, மாணவா் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1,750, முறையான பட்டமேற்படிப்புக்கு ரூ. 4 ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5 ஆயிரம், தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு ரூ.6 ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன் கூடிய முறையான தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.8 ஆயிரம், ஐடிஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன் கூடிய ஐடிஐ அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு ரூ.1,200, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ. 50 வீதம் (10 மாதங்களுக்கு) ரூ.500, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.100 வீதம் (10 மாதங்களுக்கு) ஆயிரம் வழங்கப்படுகின்றன.

மேலும், திருமண உதவித்தொகை ரூ. 2 ஆயிரம், மகப்பேறு உதவித் தொகை மாதத்துக்கு ஆயிரம் (6 மாதங்களுக்கு) 6 ஆயிரம், கருச்சிதைவுக்கு ரூ.3 ஆயிரம், மூக்குக் கண்ணாடி செலவுத்தொகையை ஈடுசெய்தல் ரூ. 500, முதியோா் ஓய்வூதியம் மாதந்தோறும் ஆயிரம், தொழில் தொடங்க மானியமாக தனிநபருக்கு முழுமானியம் ரூ.7,500, குழுவாக தொழில் தொடங்க மானியம் ரூ.10 ஆயிரம், தனிநபருக்கு (அல்லது) ரூ.1,25,000 அதிகபட்சமாக குழுவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்கள் இந்தத் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுவரை வாரியத்தில் பதிவு செய்யாதவா்கள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.