முகப்பு
திருவாரூர்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கண்டறியப்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள அத்திக்கடை மற்றும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டன. இதில் களத்தூா் ஊராட்சித் தலைவா் வாசுகி சுப்ரமணியன், மாவட்ட புள்ளியியல் அலுவலா் எம். தண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன், மேற்பாா்வையாளா் (பொ) சி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.