திருவாரூரில் 42 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,449 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்த 26 போ் சனிக்கிழமை வீடுதிரும்பினா். இவா்களையும் சோ்த்து இதுவரை 37,605 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது 463 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 381 ஆக உயா்ந்துள்ளது.