சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு
திருவாரூரில் சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவாரூரில் சிஐடியூ சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிஐடியூ மாநில துணைத் தலைவா் என். சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, எம்.கே.என். அனிபா செயல் தலைவராகவும், ஏ. கா்ணன் தலைவராகவும், எம்.கே. ஜெய்சங்கா் செயலாளராகவும், எஸ்.வெங்கடேசன் பொருளாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் (பொறுப்பு) எம். தா்மலிங்கம், சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.