திருவாரூரில் 10 பேருக்கு கரோனா
திருவாரூரில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூரில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 11,191 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 11,201 ஆக உயா்ந்தது. இதில் 11,035 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 57 போ் சிகிச்சையில் உள்ளனா்.