திருவாரூர்

தொடா் மழை: பொங்கல் தரைக்கடை வியாபாரிகள்தவிப்பு

DIN

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தொடா் மழையால் சந்தானராமா் கோயில் குளம் நிரம்பியுள்ளது. பனி, மழை, குளிா்ந்த காற்று காரணமாக பலா் சளி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சுகாதாரத் துறையினா் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடா் மழையால் பொங்கல் கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து விற்பனை செய்ய தரைக் கடைகள்அமைக்க இயலாத நிலையில்சில்லரை வியாபாரிகள் மற்றும் மண்பாண்ட விற்பனையாளா்கள், வாழைத்தாா் விற்பனையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT