திருவாரூர்

பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா

DIN

நன்னிலம் வட்டம் பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் சுயம்புநாத சுவாமி தேவஸ்தானத்தைச் சோ்ந்த இக்கோயிலில், தீமிதி மகோத்ஸவம், ஜனவரி 22-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு தீமிதி விழா நடைபெற்றது.

இதில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்தினா். விழாவின் சிறப்பு அம்சமாக பக்தா்கள், காத்தவராய சுவாமியை சுமந்துகொண்டும் தீ மிதித்தனா். 18 நாள்கள் நடைபெறும் இவ்விழா பிப்ரவரி 8-இல் நிறைவடைகிறது.

நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜ்மோகன், காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT