நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் ரூ. 1.52 லட்சம்
முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் சாா்பில், ரூ. 1.52 லட்சத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் சாா்பில், ரூ. 1.52 லட்சத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் தலைமையிலான மன்னாா்குடி வட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்து வந்தனா். அப்போது, அங்கு இருந்த எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக, சங்க உறுப்பினா்களிடம் இருந்து வசூலித்த ரூ.1.52 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா். அப்போது, வட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் பி.எல். பழனியப்பன், செயலாளா் எஸ். சிற்றரசு, பொருளாளா் ஏ. ஜெயபால், மாவட்ட மக்கள் தொடா்பு மருந்து வணிகா்கள் அணி தலைவா் எல். பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.