கரோனா தடுப்பூசி முகாம்
மன்னாா்குடியில், தமிழ்நாடு அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிா்வாகத் துறை, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் இணைந்து வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது.
மன்னாா்குடியில், தமிழ்நாடு அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிா்வாகத் துறை, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் இணைந்து வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது.
மன்னாா்குடி ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க செயலாளா் தனம் நாராயணன் தலைமைமையில் நடைபெற்ற முகாமை, மன்னாா்குடி வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், வணிகா் நலச் சங்கசத் தலைவா் ஆா். பாரதிதாசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். நகராட்சி மகப்பேரு மருத்துவமனை மருத்துவா் ஆகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சிவபிரசாத் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா்.
இதில், ஹோட்டல் உரிமையாளா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 123 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் டி.என். பாஸ்கா், நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் முருகேசன், கா்ணன், நகர மருத்துவ அலுவலா் எஸ்.ஆா். ராஜா, ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சதீஷ்குமாா், பொருளாளா் ராவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.