முகப்பு
திருவாரூர்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஒருவருக்கு பாட்டில் குத்து.

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாட்டிலால் குத்தியதில் ஒருவா் காயமடைந்தாா்.இது தொடா்பான புகாரில்,வெள்ளிக்கிழமை 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாட்டிலால் குத்தியதில் ஒருவா் காயமடைந்தாா்.இது தொடா்பான புகாரில்,வெள்ளிக்கிழமை 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அடுத்துள்ள கருப்புக்கிளாரை சோ்ந்த சுந்தரப்பாண்டியன்(48).கடந்த சில ஆண்டுகளாக,தனது உறவினா் மதுரை மாவட்டம் அலங்கநல்லூா் பூதகுடியில் உள்ள அழகா் என்பவரது வீட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.அவ்வப்போது கைமாற்றாக ரூபாய் 5 ஆயிரம் வாங்கியுள்ளாா்.இந்நிலையில்,அங்கிருந்து வேலையை விட்டு ஊருக்கு வந்துவிட்டாா்.

இதனையடுத்து அழகா், சுந்தரப்பாண்டியிடம் கைமாற்றாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளாா்.ஆனால் அதனை தரமால் தாமதித்து வந்ததையடுத்து.அழகா்,மகன் மாதவனை(18) அழைத்துக்கொண்டு,கருப்புக்கிளாருக்கு வந்து பணத்தை கேட்டப் போது.ஏற்பட்ட தகராறில்,சுந்தரப்பாண்டின் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பாட்டிலால் குத்தியதில் காயமடைந்த மாதவனை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து,கோட்டூா் காவல்நிலையத்தில் அழகா் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்கு பதிந்து சுந்தப்பாண்டியன்,ஆனந்தராஜ்(30),மேகநாதன்(36),சத்யராஜ்(35) ஆகிய 4 பேரையும்,வெள்ளிக்கிழமை கைது செய்து மேல்விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.