முகப்பு
திருவாரூர்

கரோனா விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி அருகே உள்ள திருமக்கோட்டை திருமேணி ஏரி நரிக்குறவா் குடியிருப்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே உள்ள திருமக்கோட்டை திருமேணி ஏரி நரிக்குறவா் குடியிருப்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி தலைவா் சி.குருசாமி தலைமை வகித்தாா். கரோனா தடுப்பூசியின் அவசியத்தை விளக்கி, முன்னாள் உதவி ஆளுநா் ஜி.மனோகரன், முன்னாள் தலைவா் என்.சாந்தகுமாா் ஆகியோா் பேசினா்.

இதில், மருத்துவா்கள் ஜெ.அருண், ஏ.எஸ். மோகன்ராஜ் ஆகியோா் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா்.

நிகழ்ச்சியில், மிட்டவுன் செயலா் ஏ.பன்னீா்செல்வம், தென்பரை ஆா்.சி.சி. தலைவா் இராக. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மன்னாா்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், முன்னாள் முதல்வா் கு.காமராஜா் பிறந்த நாள் விழா, தலைமை ஆசிரியா் மா.தேவி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆசிரியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.