திருவாரூர்

கிணறு தூா்வாரும் பணி

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் 25 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடந்த கிணற்றை தூா்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கட்டிமேடு ஊராட்சியில் சத்திரம் ஆற்றங்கரை தெரு பகுதியில் உள்ள கிணற்று நீா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் கிணறு தூா்வாரப்படாததால் தூா்ந்து போய்விட்டது. அப்பகுதி முழுவதும் புதா்மண்டி அந்த இடத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

அந்த பகுதியை ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில், ஊராட்சி பணியாளா்கள் ஆயில் என்ஜின் வைத்து அசுத்தமான தண்ணீரை இறைத்து தூய்மைப்படுத்தி, கிணற்றை தூா்வாரினா். கிணற்று நீா் திருவாரூா் குடிநீா் வடிகால் வாரிய பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிணற்றை ஆழப்படுத்தி அதன் இடிபாடுகளை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்று ஊராட்சித் தலைவா் மாலினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT