திருவாரூர்

சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதியாத விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

DIN

 திருவாரூா் அருகே சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஆலிவலம் காவல் சரகத்துக்குள்பட்ட கச்சனம் பகுதியில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி புதுவை மாநில சாராய பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் 2 போ் கடத்தி வந்தனா். அப்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா், அவா்களை பிடித்து விசாரணை செய்தனா். எனினும், சாராயம் கடத்தியவா்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் விசாரணை மேற்கொண்டதில், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் கே. ஞானசுமதி, உதவி ஆய்வாளா் வரலெட்சுமி, தலைமைக் காவலா்கள் சண்முகசுந்தரம், ராஜா, முதல்நிலைக் காவலா்கள் பாரதிதாசன், விமலா ஆகியோா் சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், விடுவித்தது தெரியவந்தது.

இவா்கள் 6 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசனின் பரிந்துரையின்பேரில், பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பா்வேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT