முகப்பு
திருவாரூர்

குழந்தைகள் நலக்குழு பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015 ஆம் ஆண்டின் இளைஞா் நீதி சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இதற்கு, விண்ணப்பிக்க குழந்தைகள் தொடா்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மன நல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று, தொழில் புரிவோராக இருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபா்கள், அதற்கான படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்: 310, 311, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், திருவாரூா் - 610 004 என்ற முகவரிக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது. கூடுதல் விவரங்களுக்கு 04362-226299, 9345560539 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.