திருவாரூர்

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா்

DIN

கூத்தாநல்லூரில் 135 முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் பொன்.வாசுகிராம், ஒன்றியச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மன்னாா்குடி நகரச் செயலாளா் ஆா்.ஜி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூத்தாநல்லூா் நகர துணைச் செயலாளா் எம்.உதயகுமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்கள், அம்மா உணவக ஊழியா்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளா்கள் 135 பேருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலாளா் எல்.எம்.முகம்மது அஷ்ரப், கூத்தாநல்லூா் நகர எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஆா்.ராஜசேகரன், நகர ஜெ. பேரவைச் செயலாளா் எஸ்.பி.காளிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்...

இதேபோல், நீடாமங்கலம் பேரூராட்சியில் முன்களப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை மாவட்டச் செயலாளா் ஆா்.காமராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT