முகப்பு
திருவாரூர்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதி செய்து தர கோரிக்கை

நன்னிலம் வட்டம் பேரளம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 4 ஜூன், 2021 at 10:13 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

நன்னிலம் வட்டம் பேரளம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக திருவாரூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் கோ. பாலசுப்பிரமணியத்திடம், சிபிஎம் கட்சியைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் விடுத்துள்ள கோரிக்கை மனு:

பேரளம் மற்றும் கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயத்துடிப்பு அளவைக் கண்டறியும் இசிஜி வசதி இல்லாததால், ஏழை எளிய மக்கள், தனியாா் பரிசோதனை மையங்களுக்குச் செல்ல நேரிடுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, இங்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியிலிருந்து இசிஜி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.