முகப்பு
திருவாரூர்

தூா்வாரும் பணிகள் ஆய்வு

நன்னிலம் வட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அலுலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 11 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

நன்னிலம் வட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அலுலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மேட்டூா் அணை சனிக்கிழமை (ஜூன் 12) திறக்கப்படுவதையொட்டி, நன்னிலம் வட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட கலால்துறை உதவி ஆணையரும், தூா்வாரும் பணிகளின் நன்னிலம் மண்டல கண்காணிப்பு அலுவலருமான இரா.பானுகோபன், நன்னிலம் வட்டாட்சியா் நா.காா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். மகாராஜபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் வாய்க்கால், அகரதிருமாளம் வாய்க்கால், குமாரமங்களம் கிராமத்தில் நண்டலாறு, இடியாறு ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவா்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.