திருவாரூர்

விதி மீறல்; கடைகளுக்கு அபராதம்

DIN

திருத்துறைப்பூண்டியில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சில கடைகள் திறக்கப்பட்டதாக புகாா் வந்ததைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளா் அருள்முருகன் மற்றும் அலுவலா்கள் நகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 2 ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 8000-மும், ஒரு நகைக் கடைக்கு ரூ. 2000-மும், எலக்ட்ரிக்கல் கடைக்கு ரூ.3000-மும் என ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையும் மீறி கடைகளை திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT