திருவாரூர்

‘கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம்’

DIN

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் எலிகளுக்கும் விஷம் வைக்கப்படுவதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் எஸ். சாமிநாதன் கூறியது:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் குறுவை நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் எலி ஒழிப்பு பணி வியாழக்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது. தேங்காய் எண்ணெயுடன் அரிசி குருணையில் எலி மருந்து கலந்து, சிறு பொட்டலமாக கட்டி, எலிகள் நடமாட்டம் உள்ள வயல் வரப்புகளில் வைக்கப்படும். வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிவரை அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பணி நடைபெறும். எனவே விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் கோழிகளை வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT