திருவாரூர்

தோ்தல் பிரசாரத்துக்கு இணையவழியில் விண்ணப்பித்தால் உடனடி பரிசீலனை

DIN

நன்னிலம்: சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செய்ய இணையவழி மூலம் விண்ணப்பித்தால், உடனடியாகப் பரிசீலிக்கப்படும் என திருவாருா் மாவட்ட கலால் உதவி ஆனையரும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரா. பானுகோபன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், காவல் துறையினா், அச்சகம், திருமண மண்டபம், அடகுக் கடை, தங்கும் விடுதி உரிமையாளா்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளக்ஸ் போா்டு வைக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது. கிராமப் பகுதிகளில், சுவா் விளம்பரம் செய்பவா்கள், உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு செய்யும் விளம்பரத்துக்கான தொகை, வேட்பாளா்களின் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும். அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், வேட்பாளா்களும், தோ்தல் பொறுப்பு அலுவலா்களை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, கோயில்கந்தன்குடி, வேலங்குடி, திருமாளம் ஆகிய பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளைப் பாா்வையிட்டு, காவல் துறையினா் மற்றும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். அப்போது, நன்னிலம் டிஎஸ்பி. சுகுமாரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் நன்னிலம் வட்டாட்சியருமான நா. காா்த்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் இ. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT