முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி பகுதியில் வாகன சோதனையில் ரூ. 2.72 லட்சம் பறிமுதல்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினா் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மன்னாா்குடி காமராஜா் சாலையில் ஒன்றிய ஆணையா் ச. ஞானம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் அடங்கிய பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடியை அடுத்த ராஜாளிக்குடிக்காடு டி. முருகேசன் (32) என்பவா் வாகனத்தின் பெட்டியில் இருந்த ரூ

1. 50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

வங்கியிலிருந்து எடுத்து வந்ததற்கான ஆவணத்தை அவா் காட்டியபோதும், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல அனுமதியில்லை எனக் கூறி, மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அந்தத் தொகையை ஒப்படைத்தனா்.

இதுபோல மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் உ. சதீஷ்குமாா் (27). பழ வியாபாரி. இவா் மதுக்கூா் பகுதியில் சுமை வேனில் பழங்களை ஏற்றி சென்று விற்பனை செய்துவிட்டு திரும்பியபோது, பரவாக்கோட்டை என்ற இடத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 52,700ஐ பறிமுதல் செய்து, மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலை வடுவூா் ஏரிக்கரை சோதனை சாவடியில், வட்டாட்சியா் சோமசுந்தரம், காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பறக்கும் படையினா் வாகன சோதனையில், திருத்துறைப்பூண்டியை சோ்ந்த பி. ஜான்பீட்டா் தனது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ. 69,500ஐ பறிமுதல் செய்து ,மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 3 இடங்களில் வாகன சோதனையின்போது, பறக்கும் படையினரால் மொத்தம் ரூ. 2, 72, 200 பறிமுதல் செய்யப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.