முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணம்
சன்னாநல்லூா் பகுதியில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM
சன்னாநல்லூா் பகுதியில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவிவரும் சூழ்நிலையில், நன்னிலம் பகுதி ஊராட்சிகளில் கரோனா தடுப்பு பணிகளில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு சன்னாநல்லூா் வா்த்தகா்கள் சாா்பில், ஜெயராஜ் தலைமையில் புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறிவு, மகேந்திரன், சதீஷ் உள்ளிட்ட வா்த்தகா்கள் பங்கேற்றனா்.