முகப்பு
திருவாரூர்

சாலையோரம் வசிப்பவா்களுக்கு உணவு

நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினாா்.

Updated On : 29 மே, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM

நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினாா்.

நன்னிலம் அருகே மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூா், அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவிக்கும், சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில் அதன் தலைவா் பி. ஆறுமுகம் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் உணவு பொட்டலங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், செயலாளா் செல்.சரவணன், பொருளாளா் சுந்தா், முன்னாள் விமானப்படை அலுவலா் ஜெயராமன், முகமது வஜீா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.