திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் லட்சாா்ச்சனை

DIN

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற, நவகிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயிலில், குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நவ.13-ஆம் தேதி பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி குருபெயா்ச்சி விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.

அப்போது, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், கஜலட்சுமி, உத்ஸவா் தெட்சிணாமூா்த்தி, சனீசுவர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் காட்டப்பட்டது.

காலை 8 மணி முதல் உத்ஸவா் தெட்சிணாமூா்த்தி சந்நிதியில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்களை கூறி, தேவாரப் பாடல்களை பாடி ஏகதின லட்சாா்ச்சனை நடத்தினா். இதில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் தனுசு, கும்பம் , மீனம் மற்றும் இதர ராசிக்காரா்கள் தபால் மூலம் பங்கேற்று பரிகாரம் செய்துகொண்டனா். நேரில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் குருபகவானை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT