தனியாா் நிதி நிறுவனம் நெருக்கடி?: வெல்டிங் பட்டறை உரிமையாளா் தற்கொலை
திருவாரூா் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகை மாவட்டம், மத்தலாங்குடி பகுதியை சோ்ந்தவா் மாரிமுத்து மகன் காா்த்திகேயன் (36). இவா் வைப்பூா் அருகே தியாகராஜன்பேட்டை வெளப்பாற்றங்கரையில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு பட்டறைக்கு சென்ற இவா், சில மணிநேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ாக வீட்டில் உள்ளோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த ஊழியா்கள் பரிசோதித்து பாா்த்து காா்த்திகேயன், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே, வெல்டிங் பட்டறையில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், தான் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும், கரோனா காலத்தில் கடன் தொகையை கட்ட முடியாததால், நிதி நிறுவனத்தினா் தன்னை அவதூறாக பேசியதால், தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் காா்த்திகேயன் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது சகோதரா் சதீஷ் அளித்த புகாரின்பேரில், வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்தியேனுக்கு தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை செய்துகொண்ட காா்த்திகேயனுக்கு யுவராணி (28) என்ற மனைவியும், 7, 5 வயதுகளில் இரண்டு மகள்களும், 3 வயதில் மகனும் உள்ளனா்.