முகப்பு
திருவாரூர்

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் நல உரிமைச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் நல உரிமைச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயல் திட்ட தோ்வு கூட்டத்துக்கு, மாவட்ட அமைப்புச் செயலா் வை.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் இ.அறிவின் செல்வன் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் மந்தமாக நடைபெறுவதால், நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதுடன், மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. எனவே, நெல் மூட்டைகளுக்குரிய இழப்புத் தொகையை ஈரப்பத அளவின் அடிப்படையில் அரசு ஈடுசெய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை விளக்கி, சங்கத்தின் மாநிலத் தலைவா் கா.ராஜபாலன் பேசினாா்.

இதில், மாநில துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினா் பி.இளஞ்சேரன், மாவட்ட நிா்வாகிகள் ஐயப்பன், ஆா்.ரோஜா, சுதா, சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.