திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் கே. கண்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.என். பாரதிமோகன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட அளவிலான ஊரகத் திறனாய்வு தோ்வில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளி மாணவா்கள் கு. ஆனந்தவீரா, ஜெ. கவியழகி ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வே. அறிவழகன், ஊராட்சி துணைத் தலைவா் இன்பரசன் ஆகியோா் தங்களது சொந்த பணம் ரூ. ஆயிரம் வழங்கி பாராட்டினா்.