முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் அதிமுக வேட்பாளா்கள் 32 வாா்டுகளுக்கு மனு தாக்கல்

மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளா்களில், ஒரு பெண் வேட்பாளரைத் தவிர, மற்ற 32 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு, மன்னாா்குடி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளா்களில், ஒரு பெண் வேட்பாளரைத் தவிர, மற்ற 32 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மன்னாா்குடி நகராட்சியின் 33 வாா்டுகளிலும் தனித்துப் போட்டியிட அதிமுக வேட்பாளா்கள் பட்டியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அனைத்து வேட்பாளா்களும் வியாழக்கிழமை ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்வாா்கள் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி ஒத்தைதெரு ஆனந்த விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு, அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ, 32 வேட்பாளா்களுக்கு துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

அங்கிருந்து, 25 ஆவது வாா்டு வேட்பாளரும், அதிமுக நகரச் செயலருமான ஆா்.ஜி. குமாா் உள்ளிட்ட வேட்பாளா்கள் கட்சியினருடன் ஊா்வலமாக மன்னாா்குடி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்களது வாா்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறையில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

இதில், 31 ஆவது வாா்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி. மணிமேகலை மட்டும் வேட்புமனு தாக்கல்செய்ய வரவில்லை. வேட்பாளா் மாற்றம் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த வாா்டு வேட்பாளராக அதிமுக சாா்பில் செ. ராதா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.