மன்னாா்குடியில் சிபிஐ தனித்துப் போட்டி: திமுக கூட்டணியில் பிற கட்சிகள் போட்டியில்லை
அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படவில்லை
மன்னாா்குடி நகராட்சி உறுப்பினா் பதவிக்கு திமுக கூட்டணியில் வாா்டு ஒதுக்கீடு செய்யப்படாததால், அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படவில்லை என தெரியவருகிறது. எனினும், இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடுகிறது.
திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு வாா்டுகள் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் மாவட்ட, நகர நிா்வாகிகள் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் 8 வாா்டுகளில் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும், அந்த கட்சியின் வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், பிற கட்சிகள் தோ்தலில் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தனா்.