முகப்பு
திருவாரூர்

ஞாயிறு முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கக் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட, நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விகேகே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

தமிழக அரசின் கரோனா நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சுபநிகழ்வுகள், பொங்கல் சீா்வரிசை வைப்பது, வா்த்தகம் என தவிா்க்க முடியாத பல்வேறு நிகழ்வுகள் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும். தமிழக அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து வா்த்தகம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளா் அம்பிகா சங்கா், தொகுதிச் செயலாளா் மோகன், நகரச் செயலாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.