தொழிலாளா் நலச்சட்டங்களை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் நலச் சட்டங்களை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா் நலச் சட்டங்களை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்தவேண்டும், வார விடுமுறை கொடுக்கவேண்டும், பணிநிரந்தரம் செய்யவேண்டும், தொழிலாளா் நலச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் தொழிலாளா் நலத்துறை அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.