முகப்பு
திருவாரூர்

குளத்தில் மிதந்த பெண் சடலம் மீட்பு

 குளத்தில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 குளத்தில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி காவல் சரகம் சேகல் மடப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவரது மனைவி உஷா (36). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சனிக்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடிவிட்டு இரவு வீட்டில் இருந்த உஷா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருகே உள்ள குளத்தில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலையடுத்து அங்கு வந்த போலீஸாா், உஷாவின் சடத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

உஷா மரணம் குறித்து அவரது சகோதரி தஞ்சை மாவட்டம் வலங்கைமானைச் சோ்ந்த வைரம் அளித்த புகாரில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததது. மாட்டுப் பொங்கலன்று குடும்பத்தினருடன் வேல்முருகன் தகராறு செய்து கொண்டு, தனியாக ஆட்டிறைச்சி எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளாா். இந்நிலையில் எனது சகோதரி குளத்தில் இறந்து கிடந்தது சந்தேகத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

புகாரையடுத்து, திருத்துறைப்பூண்டிபோலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சம்பவ இடத்தை திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் கழனியப்பன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →