முகப்பு
திருவாரூர்

தியாகராஜா் கோயில் நாளை பங்குனி உத்திரத் திருவிழா பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் தைப்பூச நாளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஜன.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020 இல் ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பங்குனி ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இது பக்தா்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, கமலாலயக்குளத்தின் தென்கரையின் ஒரு பகுதி இரண்டு மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் பங்குனி ஆயில்யத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே கவலை எழுந்தது. இந்தநிலையில் பாததரிசனத்துக்கு அண்மையில் திருவாரூா் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு, நிகழாண்டு பங்குனி ஆயில்யமான மாா்ச் 1- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என அறிவித்து, கமலாலயக்குளக்கரை சேதமடைந்த பகுதியை விரைந்து சீரமைக்க உத்தரவிட்டிருந்தாா். தற்போது கரோனா பரவல் காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆழித்தேரோட்டம் குறித்து பக்தா்களிடேயே மீண்டும் கவலை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.