முகப்பு
திருவாரூர்

கரோனா தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் கௌரி தலைமையில், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், நாகை சாலை சாய்பாபா கோயில் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மேலும், ஆலத்தம்பாடி, கொறுக்கை, விளக்குடி உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுற்று வட்டாரப் பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் மற்றும் அதற்கும் மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் 2-ஆவது தவணை ஊசியும், 3-ஆவது பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒரே நாளில் 350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →