முகப்பு
திருவாரூர்

பரம்பரிய நெல் அறுவடை திருவிழா

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வயல்வெளியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வயல்வெளியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் தெரிவித்தது: பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் நோக்கத்துடன் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வேளாண் பண்ணையில், மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயாணம், இலுப்பைபூச்சம்பா, சீரகச்சம்பா, கல்லுருண்டை சம்பா, சிவப்பு கவுனி, கருப்பு கவுனி, மஞ்சள் பொன்னி, சிறு மிளகி, செம்மிளகி, மிளகு சம்பா, குடவாளை, தங்கச்சம்பா, ஆத்தூா் கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு தற்போது அனைத்து ரகங்களும் அறுவடை செய்யப்பட்டுள்ளன. 60 நாட்கள் முதல் 200 நாட்கள் வயதுடைய அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் இவை.

பொதுவாக, பாரம்பரிய நெல் ரகங்கள் பருவநிலை மாற்றத்தை எதிா்கொண்டு, அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு உழவா்களுக்கு நல்ல மகசூலை கொடுக்கக்கூடியவை. நிகழாண்டு பெய்த கனமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டியும் நல்ல முறையில் விளைச்சல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வோா் ஆண்டும் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு, தமிழக அரசு விதைப் பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு இருப்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

மேலும், ரசாயன சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளும், இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →