முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தரசெயல் அலுவலரை நியமிக்க வலியுறுத்தல்

 திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட அமைப்புச் செயலாளா் தக்பீா் நெய்னா முகமது தலைமையில், இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலாளா் ஜெகபா் பாட்சா, நகர துணைத் தலைவா் முகமது ஹசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மெட்ரோ மாலிக் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமைபேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: முத்துப்பேட்டை தோ்வுநிலை பேரூராட்சிக்கு அண்மைக்காலமாக நிரந்தர செயல் அலுவலா் இல்லை. அண்மையில் ஒரு நிரந்தர செயல் அலுவலா் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அவா் பொறுப்பு ஏற்கவில்லை. இதேபோல, இந்தப் பேரூராட்சிக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் செயல் அலுவலரும் பணிக்கு வருவதில்லை. இதனால், அலுவலகத்தில் பணிகள் பெருமளவில் முடங்கியுள்ளன. நகா் முழுவதும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

எனவே, முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலரை நியமனம் செய்யவேண்டும். அதுவரை தற்காலிக பொறுப்பு அதிகாரி தினந்தோறும் முத்துப்பேட்டைக்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுவை பெற்றுக்கொண்ட அலுவலா் வெங்கட்ராமன், உயா் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →